புதுச்சேரி

கும்பாபிஷேக விழாவில் கவர்னர் தமிழிசை சாமி தரிசனம் செய்த காட்சி. அருகில் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளார்.

அகோர வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-02-10 13:10 IST   |   Update On 2023-02-10 13:10:00 IST
  • வில்லியனூர் தட்டாஞ்சாவடியில் காளிகாம்பாள் சமேத அகோரவீரபத்திர சுவாமி கோவில் உள்ளது.
  • தேசிக பராமச்சாரிய சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் தட்டாஞ்சாவடியில் காளிகாம்பாள் சமேத அகோரவீரபத்திர சுவாமி கோவில் உள்ளது.

இங்குள்ள பால்முத்து மாரியம்மன், அறிவொளி விநாயகர், கங்கை அம்மன், காளிகாம்பாள் சமேத அகோர வீரபத்திரர் ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்து வந்தது. திருப்பணிகள் முடிந்து காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நட ந்தது.

திருவாடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பராமச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பராமச்சாரிய சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

கும்பாபிஷேக விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், எதிர்கட்சித்தலைவர் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News