அன்பழகனை விடுவிக்க கோரி அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்த காட்சி.
அ.தி.மு.க.வினர் ஊர்வலம்-போலீஸ் நிலையம் முற்றுகை
- புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு ஓதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார்.
- இதேபோல ஓதியஞ்சாலை போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க. ஆட்டோ சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு ஓதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார்.
தகவலறிந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த புதுவை அ.தி.மு.க.வினர் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அங்கிருந்து பொருளாளர் ரவிபாண்டுரங்கன் தலைமையில் ஊர்வலமாக ஓதியஞ்சாலை போலீஸ் நிலையம் நோக்கி புறப்பட்டனர்.
அவர்களை வாட்டர் டேங்க் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தீயணைப்பு நிலைய வளாகத்தில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல ஓதியஞ்சாலை போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க. ஆட்டோ சங்கத்தினர் முற்றுகையிட்டனர். கைது செய்யப்பட்ட அன்பழகனை விடுவிக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.