புதுச்சேரி

முத்தியால்பேட்டை சின்னமணிக்கூண்டு அருகில் அ.தி.மு.க. மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் மலர் அஞ்சலி செலுத்திய காட்சி.

ஜெயலலிதா உருவ படத்துக்கு அ.தி.மு.க.வினர் அஞ்சலி

Published On 2022-12-05 09:17 GMT   |   Update On 2022-12-05 09:17 GMT
  • தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
  • இதேபோல, முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

புதுச்சேரி:

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் உப்பளம் தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் அன்பானந்தம் முன்னிலையில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு

அ.தி.மு.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடற்கரை சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், நடராசன், நிர்வாகிகள் வீரம்மாள், கணேசன், மகாதேவி, திருநாவுக்கரசு, ராஜாராமன், பொருளாளர் ரவிபாண்டுரங்கன், அன்பழக உடையார், கணேசன், எம்.ஏ.கே. கருணாநிதி, மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சிவாலயா இளங்கோ, மருதமலையப்பன், பாப்புசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல, முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. 100 அடி சாலையில் உள்ள அவரின் சிலைக்கு ஓம்சக்திசேகர் மாலை அணிவித்து உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து மாநில நிர்வாகிகளும் தொண்டர்களும், பொதுமக்களும், அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் ெஜயலலிதா உருவப்படத்திற்கு தூவி அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சதாசிவம், கணேசன், கோவிந்தம்மாள், சங்கர் உடையார், மாசிலா குப்புசாமி, மலை செல்வராஜ், முருகதாஸ், லட்சுமணன், வெரோனிகா, புகழ் பாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முத்தியால்பேட்டை தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஊர்பிரமுகர்கள் ஊர்வலமாக காந்தி வீதியில் உள்ள திருக்குறள் மணிக்கூண்டுக்கு வந்தனர்.

அங்கு வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு வையாபுரி மணிகண்டன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஏழைகளுக்கு வையாபுரி மணிகண்டன் அன்னதானம் வழங்கினார்.

தொடர்ந்து வில்லியனுரில் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ெஜயலலிதாவின் உருவப்ப டத்துக்கு வையாபுரி மணிகண்டன், தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தனர்.நிகழ்ச்சியில் அதிமுக கிழக்கு மாநில நிர்வாகிகள் பழனிசாமி, கஜேந்திரன், உதயசூரியன், மோகன், முருகேசன், விஸ்வநாதன், அந்துவான், மேற்கு மாநில நிர்வாகிகள் வில்லியனூர் முன்னாள் தொகுதி செயலாளர் மணி, இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், தொகுதி கழக செயலாளர் கோபால், தர்மலிங்கம், மாநில பாசறை துணை செயலாளர் அஜய் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

காக்கையன்தோப்பு கிளை அ.தி.மு.க. சார்பில் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவபடத்துக்கு எம்.ஜி.ஆர். அமைப்பு குழு தலைவர் மாசிலா குப்புசாமி தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் தொகுதி அவைத்தலைவர் குமரன், எம்.ஜி.ஆர். சிலை அமைப்பு குழு நிர்வாகி சரவணன், கதிர்வேல், ஜெயலட்சுமி, நடராஜன், சுப்புராயன், காண்டீபன், ராஜலட்சுமி ராமசாமி, சேகர் என்ற வீரப்பன், மோகன்ராஜ், மகாலிங்கம், பரமசிவம், ராமசந்திரன், சாந்தநாயகி, வேல்முருகன், ஜெயசந்திரன், கோவிந்தன், ஆறுமுகம், வார்டு நிர்வாகிகள் குணாளன், முருகன், அஞ்சான், பழனியம்மாள், சாம்சிவம், தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News