புதுச்சேரி
பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்படி ஆட்டோ டிரைவரிடம் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் கேட்டுக்கொண்ட காட்சி.
பந்த் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டிய அ.தி.மு.க.
- புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டி அ.தி.மு.க. சார்பில் நாளை 28-ந் தேதி பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அண்ணாசிலையில் தொடங்கி அண்ணாசாலை, நேருவீதி, காந்திவீதி, பெரியமார்க்கெட் வீதி வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பந்த் போராட்டத்திற்கு ஆதரவு கோரினர்.
புதுச்சேரி:
புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டி அ.தி.மு.க. சார்பில் நாளை 28-ந் தேதி பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் பிரச்சாரம் செய்தனர். அண்ணாசிலையில் தொடங்கி அண்ணாசாலை, நேருவீதி, காந்திவீதி, பெரியமார்க்கெட் வீதி வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பந்த் போராட்டத்திற்கு ஆதரவு கோரினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாநில செயலாளர் நடராசன், மாநில ஜெ.பேரவை செயலாளர் பாஸ்கர், துணை தலைவர் ராஜாராமன், இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், நகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.