புதுச்சேரி

 ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசிய காட்சி.

புதுவை ரெயில் நிலையம் முன்பு அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-14 14:18 IST   |   Update On 2023-08-14 14:18:00 IST
  • புதுவை அ.தி.மு.க. சார்பில் ரெயில் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • கொலை வெறி தாக்குதல் சம்பவம் குறித்து உண்மை கருத்துக்களை எடுத்துக் கூறினார்.

புதுச்சேரி:

தமிழக சட்ட சபையில் கடந்த 1989-ம் ஆண்டு மறைந்த தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா தாக்கப்பட்டது தொடர்பான விமர்சனங்களை கண்டித்து புதுவை அ.தி.மு.க. சார்பில் ரெயில் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

மணிப்பூர் சம்பவத்தில் தி.மு.க.வினர் பேசிய தவறான தகவலுக்கு பதிலளிக்கும் போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாரமன் தமிழக சட்ட மன்றத்தில் ஜெயலலிதா மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல் சம்பவம் குறித்து உண்மை கருத்துக்களை எடுத்துக் கூறினார்.

தமிழக சட்ட சபையில் நடந்த கொலைவெறி சம்பவத்தை மறைத்து அவமதிக்கும் நோக்கத்தில் உண்மைக்கு புறம்பான பொய் செய்தியை முதல்-அமைச்சர் பேசியிருப்பது கண்டிக்கதக்கது. தன்மானத்தையே பதவிக்காக அடமானம் வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் திருநாவுக்கரசுக்கு அ.தி.மு.க.வைப் பற்றி பேச எந்தவித தகுதியும், அருகதையும் இல்லை.

அன்றைக்கு சட்டசபையில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரிஆனந்தன் இந்த சம்பவத்தை கண்டித்ததோடு, தானும் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டதாக கூறியி ருந்தார். உண்மை நிலையை நன்குணர்ந்த குமரி ஆனந்தனின் புதல்வி கவர்னர் தமிழிசை தைரியமாக பேட்டி அளித்துள்ளார். அதற்காக அவருக்கு அதிமுக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் தி.மு.க.விற்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் புதுவை உளளிட்ட 40 தொகுதிகளிலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தில் எடப்பாடியார் தலைமை யிலான கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் புதுவை மாநில அ.தி.மு.க. துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் எஸ்.வீரம்மாள், ஆர்.வி.திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் சாரம் கணேசன், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, மாநில கழக பொருளாளர் ரவிபாண்டுரங்கன், புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள் உமா, எம்.ஏ.கே.கருணாநிதி, பி.எல். கணேசன், குணசேகரன், நாகமணி, வி.கே.மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, காந்தி, ஜெய.சேரன், குமுதன், மணவாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம் மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன் , மேற்கு மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ, மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News