புதுச்சேரி

கோப்பு படம்.

காலிமனைகளை பராமரிக்காவிட்டால் நடவடிக்கை

Published On 2023-09-01 13:41 IST   |   Update On 2023-09-01 13:41:00 IST
  • உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
  • காலி மனை உரிமையாளர்கள் தங்கள் மனைகளை சுத்தம் செய்து தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும்.

புதுச்சேரி:

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உழவர்கரை நகராட்சி யின் பல பகுதிகளில் காலி மனைகள் உரிமை யாளர்களால் பராமரிக் கப்படவில்லை. இதனால் புதர் மண்டி விஷ பூச்சி, தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகி அருகில் வசிப்பவர்களுக்கு அச்சுறுத்தல், சுகாதார கேடு விளைவிக்கிறது.

பாதாள சாக்கடை வசதி இருந்தும், இணைப்பு தராமல் பல வீடுகளின் கழிவுநீர் திறந்தவெளி கால்வாயில் விடப்படுவதால் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி காலி மனை உரிமையாளர்கள் தங்கள் மனைகளை சுத்தம் செய்து தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும்.

கழிவுநீரை பாதாள சாக்கடையில் இணைக்க வேண்டும். தவறினால் சுற்றுப்புற சீர்கேடு தடுப்பு நடவடிக்கையின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News