புதுச்சேரி

கோப்பு படம்

அங்கன்வாடிகளில் ஆதார் இணைப்பு முகாம் நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை

Published On 2022-07-17 06:27 GMT   |   Update On 2022-07-17 06:27 GMT
  • முதியோர் உதவி தொகை பெறும் பயனாளிகள் தங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும்.
  • வங்கிகள் அலட்சியமாக செயல்பட்டதால் பல ஆயிரக்கணக்கான பயனாளிகளின் ஆதார் எண் இணைக்கப்படாமல் விடுப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயகௌகுமார் ஆகியோருக்கு நேரு எம்.எல்.ஏ., அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

முதியோர் உதவி தொகை பெறும் பயனாளிகள் தங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும். ஆனால் வங்கிகள் அலட்சியமாக செயல்பட்டதால் பல ஆயிரக்கணக்கான பயனாளிகளின் ஆதார் எண் இணைக்கப்படாமல் விடுப்பட்டுள்ளது.

இதனால் உதவித்தொகை கிடைக்காமல் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர், விதவைகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.பாதிக்கப்பட்ட முதியோர் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையிலும், எம்.எல்.ஏ.,க்களிடமும் புகார் செய்கிறார்கள். இதற்கு தீர்வு காண மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் மூலம் தொகுதிகளில் உள்ள அங்கன்வாடிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து விடுப்பட்டவர்களுக்கு வங்கி கணக்கில் ஆதார் இணைக்கும் திட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு நேரு எம்.எல்.ஏ., மனுவில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News