புதுச்சேரி

கோப்பு படம்.

நோணாங்குப்பம் படகு குழாமில் வலுவான படகு பாலம் அமைக்க வேண்டும்

Published On 2023-05-22 12:27 IST   |   Update On 2023-05-22 12:27:00 IST
  • அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவு
  • ஆய்வின்போது அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் உடனிருந்தார்.

புதுச்சேரி:

புதுவையில் சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் இடமாக நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளது. படகு குழாமில்  முன்தினம் மரத்தினால் அமைக்கப் பட்டிருந்த படகு பாலம் உடைந்து உள்வாங்கியது.

இதில் சுற்றுலா பயணிகள் தண்ணீரில் விழுந்தனர். அவர்களை ஊழியர்கள் மீட்டனர். ஆனாலும் நேற்று வழக்கம் போல படகுசவாரி தொடங்கப்

பட்டது. இந்நிலையில் தகவலறிந்த அமைச்சர் லட்சுமிநாராயணன் படகு குழாமிற்கு சென்றார். அங்கு உடைந்த நிலையில் இருந்த படகு பாலத்தை பார்வையிட்டார்.

 பின்னர் 100 பேர் ஏறி நின்றாலும் உடையாத அளவுக்கு பனை மரத்தால் வலுவான பாலம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்த ரவிட்டார். ஆய்வின்போது அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் உடனிருந்தார்.

Tags:    

Similar News