புதுச்சேரி

கோப்பு படம்.

பொது விடுமுறை அளிக்க வேண்டும்- மக்கள் நல பாதுகாப்பு பேரியக்கம் வலியுறுத்தல்

Published On 2023-01-29 04:06 GMT   |   Update On 2023-01-29 04:06 GMT
  • புதுவை மக்கள் நல பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-
  • ஆனால் அவ்வாறு அவர்கள் அறிவித்தது போல் இதுவரை எந்தவித வளர்ச்சியும் , புதிய வளர்ச்சி காணப்படவில்லை. சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ரோடு வசதிகள் மற்றும் காவி பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. இதுதான் அவர்கள் கூறிய வளர்ச்சியா?

புதுச்சேரி:

புதுவை மக்கள் நல பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகிற 30 மற்றும் 31 தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெறுவதாக அறிவித்துள்ளனர். ஜி 20 மாநாட்டில் உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

அவர்கள் கலந்து கொள்வ தால் புதுவை மாநிலம் பல்வேறு வகைகளில் வளர்ச்சி பெறும் என்று புதுவை மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் கவர்னர் தமிழிசை ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஆனால் அவ்வாறு அவர்கள் அறிவித்தது போல் இதுவரை எந்தவித வளர்ச்சியும் , புதிய வளர்ச்சி காணப்படவில்லை. சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ரோடு வசதிகள் மற்றும் காவி பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. இதுதான் அவர்கள் கூறிய வளர்ச்சியா?

அதேபோல் குறிப்பிட்ட 5 இடங்களுக்கு மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அந்த பகுதிகளிலும் தரமான சாலை வசதிகள் கிடையாது. ஏற்கனவே நகர மக்கள் பல்வேறு போக்குவரத்து நெருக்கடிகளில் உள்ளாகி வருகின்றனர். இது தினந்தோறும் வாடிக்கை யாக உள்ளது. மேலும் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலை உருவாக்கும் வகையில் சட்டத்தை மீறி பேனர்கள் அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலை தொடர்ந்து மக்கள் சந்தித்து வருவதால் ஜி20 மாநாடு நடைபெறும் வருகிற 30 மற்றும் 31 தேதிகளில் புதுவை மாநில அரசு அனைவருக்கும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்.

அல்லது குறைந்தபட்சம் கல்லூரி மற்றும் பள்ளிகளு க்காவது விடுமுறை அளிக்க வேண்டும். அப்பொழுது தான் மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதியாக இருக்க முடியும். எனது புதுவை அரசு அனைவருக்கும் பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News