மராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்ட காட்சி.
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
- மாணவிகளுக்கு விழிப்புணர்வு மராத்தான் போட்டியை நடத்தியது.
- சுவாமி விவேகானந்தர் திருவுருவ படத்திற்கு புகழஞ்சலி செலுத்தினார்கள்.
புதுச்சேரி:
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் மற்றும் புதுவையில் ஜி 20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு விவேகானந்தர் சேவை மையம் சார்பில் முதலியார் போட்டை அர்ஜூனன் சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் உழந்தை கீரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு மராத்தான் போட்டியை நடத்தியது.
போட்டியில் வெற்றி பெற்ற சீனியர், ஜூனியர் மாணவ- மாணவிகளுக்கும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள், கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பாரி தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ( பெண்கள்) சிவராம ரெட்டி, டாக்டர் வெற்றி செல்வம், ஜோதி சிலம்பம் சத்ரிய குருகுலம் நிறுவனர் டாக்டர் ஜோதி செந்தில் கண்ணன், பாத சிகிச்சை வல்லுனர் டாக்டர் கருணாகரன், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை அதிகாரி ரவி, புதுவை தொழில் நுட்ப கல்லூரி பேராசிரியர் ஆனந்த நடராஜன், மையத்தின் செயலாளர் செல்வம், பொருளாளர் கார்த்திகேயன் துணை தலைவர் இன்ப சேகர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளை வாழ்த்தி பரிசுகள் வழங்கினார்கள்.
விழாவில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டு விவேகானந்தர் பிறந்த நாளை யொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த சுவாமி விவேகானந்தர் திருவுருவ படத்திற்கு புகழஞ்சலி செலுத்தினார்கள்.
தேசிய நல் ஆசிரியர் விருது பெற்ற அரவிந்தராஜா நன்றி கூறினார்.