புதுச்சேரி

திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர்.

உலக நன்மை வேண்டி மகா யாகம்

Published On 2022-12-31 13:39 IST   |   Update On 2022-12-31 13:39:00 IST
  • வில்லியனூர் அருகே காசியினும் வீசம் பெற்ற திருக்காஞ்சி ஸ்ரீ கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் சங்கராபரணி ஆற்றக்கரையில் அமைந்துள்ளது.
  • தொடர்ந்து நவக்கிரக ஹோமம், மகாசாந்தி, பூர்ணாகுதி, கலச புறப்பாடு, அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே காசியினும் வீசம் பெற்ற திருக்காஞ்சி ஸ்ரீ கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் சங்கராபரணி ஆற்றக்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புத்தாண்டு தினமான நாளை (ஞாயிற்றுக்கிழமை) உலக நன்மை வேண்டி மகா யாகம் நடக்கிறது.

7 மணிக்கு ஸ்ரீ நவசக்திபீடம் சார்பில் உலக நன்மை வேண்டி 51 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 24 நட்சத்திரம், 12 ராசிகள், 9 கிரகங்கள், மும்மூர்த்திகளுக்கு சிறப்பு மகாயாகம் நடத்தப்படுகிறது.

தொடர்ந்து நவக்கிரக ஹோமம், மகாசாந்தி, பூர்ணாகுதி, கலச புறப்பாடு, அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீ நவசக்திபீடம், ஆன்மிக ரத்தினா, ஸ்ரீலஸ்ரீசீனிவாச சுவாமிகள், சிறப்பு அதிகாரி சீத்தாராமன், செயல் அதிகாரி சதீஷ், தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் செய்து வருகின்றனர்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News