புதுச்சேரி

மதகடிப்பட்டு நான்கு முணை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் பழுதான வேனை தள்ளி சென்ற காட்சி.

நடுரோட்டில் பழுதாகி நின்ற வேன்

Published On 2022-12-30 10:28 IST   |   Update On 2022-12-30 10:28:00 IST
  • சென்னை - நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி நடைபெற்று வரும் நிலையில் மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பகுதிக்காக மேற்கு பகுதியில் களிமண் கொட்டப்பட்டுள்ளது.
  • இந்த நிலையில் வளவனூரில் இருந்து மதகடிப்பட்டு வழியாக தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் பழுதாகி நடுரோட்டில் நின்றது.

புதுச்சேரி:

சென்னை - நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி நடைபெற்று வரும் நிலையில் மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பகுதிக்காக மேற்கு பகுதியில் களிமண் கொட்டப்பட்டுள்ளது.

இதனால் மடுகரையிலிருந்து வரும் வாகனங்கள் திருக்கனூரில் இருந்து வரும் வாகனங்கள், புதுவையில் இருந்து விழுப்புரம் செல்லும் வாகனங்கள் சொல்ல முடியாமல் நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

இந்த நிலையில் வளவனூரில் இருந்து மதகடிப்பட்டு வழியாக தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் பழுதாகி நடுரோட்டில் நின்றது.

அந்த வேலை பெண் ஊழியர்கள் நீண்ட தூரம் தள்ளி வேனை இயக்க உதவி செய்தனர்.

மதகடிப்பட்டு திருபுவ னை பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்குகின்றன. இந்தப் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படியான போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News