புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவையில் வைரஸ் காய்ச்சலால் 730 பேர் பாதிப்பு

Published On 2022-09-22 14:41 IST   |   Update On 2022-09-22 14:41:00 IST
  • புதுவையில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அரசு மருத்துவமனை, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல வழிமையங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • 200 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி:

புதுவையில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

அரசு மருத்துவமனை, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல வழிமையங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று புதுவை அரசு ஆஸ்பத்திரியில் 62, மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 594, காரைக்காலில் 74 பேர் என 730 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்திருந்தனர்.

குழந்தைகள் நல பிரிவில் அரசு மருத்துவமனையில் 42, மகளிர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 145, காரைக்காலில் 13 பேர் என 200 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர பெரியவர்கள் 59 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags:    

Similar News