புதுச்சேரி

கோப்பு படம்.

40 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்க பிளாண்ட்

Published On 2023-11-17 14:19 IST   |   Update On 2023-11-17 14:19:00 IST
  • அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
  • ஒரு எம்.எல்.டி. குடிநீர் திட்ட பிளாண்ட்அமைக்க ரூ.8 கோடி தேவை.

புதுச்சேரி:

புதுவையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்திருந்தார்.

இதன்படி சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் புதுவை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

புதுவையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமைப்பதற்கான இடம், பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

புதுவை நகர பகுதிக்கு ஒரு நாளைக்கு 120 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை உள்ளது. ஒரு எம்.எல்.டி. குடிநீர் திட்ட பிளாண்ட்அமைக்க ரூ.8 கோடி தேவை. 100

எம்.எல்.டி. குடிநீர் பிளான்ட் அமைக்க ரூ.800 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டது. இதன்பின் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து விளக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தினார்.

இதுகுறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறியதாவது:-

புதுவை எதிர்காலத்தில் நிலத்தடி நீரை மட்டும் சார்ந்திருக்க முடியாது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கிராமப்புறங்களில் இருந்து நகருக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது. முதல் கட்டமாக 40 எம்.எல்.டி. அளவு கடல்நீரை குடி நீராக்கும் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News