புதுச்சேரி

பாப்ஸ்கோ கிடங்கில் வைக்கப்பட்டுள்ள ரேசன் அரிசிகளை எதிர் கட்சி தலைவர் சிவா மற்றும் சம்பத் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்ட காட்சி.

30 டன் ரேஷன் அரிசி சேதமடைந்துள்ளது தி.மு.க. குற்றச்சாட்டு

Published On 2022-06-10 14:39 IST   |   Update On 2022-06-10 14:39:00 IST
  • குடோனில் வைக்கப்பட்டுள்ள 30 டன் ரேசன் அரிசி மக்கி துர்நாற்றம் வீசியதாக தி.மு.க குற்றச்சாட்டுகிறது.
  • புதுவை மரப்பாலம் சந்திப்பில் நகராட்சிக்கு சொந்தமான அங்காடி வளாகம் உள்ளது.

புதுச்சேரி:

புதுவை மரப்பாலம் சந்திப்பில் நகராட்சிக்கு சொந்தமான அங்காடி வளாகம் உள்ளது.

அதை குடோனாக பாப்ஸ்கோ செயல்படுத்து கிறார்கள். கீழ் பகுதியில் உள்ள 2 கடைகளில், ரேஷனில் விநியோகிக்கப்படும் இலவச அரிசி மூட்டைகளை வைத்துள்ளார்கள்.

கொரோனா காலத்து க்கு முன்பேயே அரிசி வைக்கப்ப ட்டதால் உள்ளேயே மக்கி, புழு பூத்து நாற்றம் வீசத் தொடங்கியது. அதையடுத்து எம்.எல்.ஏ. சம்பத்திடம் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அவரும், எதிர்க்கட்சி த்தலைவர் சிவாவும் அங்கு வந்து குடோனை திறந்து பார்த்தனர். 2 அறைகளிலும் 100-க்கணக்கான அரிசி மூட்டைகள் மக்கி புழு பூத்து துர்நாற்றம் வீசியது. அவை முற்றிலும் வீணாகிபோயிருந்தது. மொத்தம் 30 டன் வரை அரிசி வீணாகியிருந்தது தெரிய வந்தது.

இதுபற்றி எதிர்க்கட்சி த்தலைவர் சிவா கூறுகையில், "பாப்ஸ்கோ நிறுவனமானது அரசு துறைக்கு சொந்தமான வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், நகராட்சி இடங்களில் பொருட்களை போட்டு மூடி வாடகையும் தராமல் உள்ளனர்.

பாப்ஸ்கோ நிறுவனம் வாடகை தராமல் உள்ளதால் நகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் தரமுடியாத நிலை உள்ளது. அரிசி மூட்டைகளை இங்கு ஏன் வைத்தார்கள் - விநியோகம் ஏன் செய்யவில்லை என்ற கேள்வி உள்ளது. அரிசிக்கு பணம் தந்தது பாப்ஸ்கோவா, குடிமை பொருள் வழங்கல்துறையா என தெரியவில்லை.

நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வைத்துள்ளது ஏன் எனவும் தெரியவில்லை. மக்களுக்கு தரவேண்டிய அரிசி கணக்குகாட்டாமல் வைத்துள்ளார்களா என்ற விவரங்கள் அதிகாரிகளிடம் இருந்து இதுவரை கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். மக்களுக்கு வழங்கவேண்டிய அரிசி முற்றிலும் வீணாகி போயுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News