கஞ்சா விற்ற வாலிபர்களையும், அவர்களை கைது செய்த போலீசாரையும் படத்தில் காணலாம்.
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது
- காலாப்பட்டு அருகே பல்கலைக்கழக-சட்ட கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
- காலாப்பட்டு போலீசார் போதை தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் தலைமை யிலான குழுவினருடன் விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
காலாப்பட்டு அருகே பல்கலைக்கழக-சட்ட கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
காலாப்பட்டு அருகே கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரியும் ஒரு பெண் தனது கணவர் கஞ்சா போதைக்கு அடிமையாகி விட்டதாகவும், அவருக்கு சிலர் மறைமுகமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து காலாப்பட்டு போலீசார் போதை தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் தலைமை யிலான குழுவினருடன் விசாரணை நடத்தினர்.
அப்போது டாக்டரின் கணவருக்கு காலாப்பட்டு அருகே தமிழக பகுதியான புத்துப்பட்டில் உள்ள அகதிகள் முகாமை சேர்ந்த நிரோஜான் என்பவர் கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நிரோஜானை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவருடன் அதே அகதிகள் முகாமை சேர்ந்த வசந்தகுமார் மற்றும் அகிலன் ஆகியோரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னையில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சிறு சிறு பொட்டலங்களாக 5 கிராம் கஞ்சா ரூ.500-க்கு விற்று வந்ததும், இவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சட்டகல்லூரி மாணவர்களை குறி வைத்து அவர்களை கஞ்சா பழக்கத்துக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.