புதுச்சேரி

ஏ.ஐ.டி.யூ.சி. மாநில மாநாடு நடைபெற்ற காட்சி.

ஏ.ஐ.டி.யூ.சி.யின் 20-வது மாநில மாநாடு

Published On 2022-12-06 08:18 GMT   |   Update On 2022-12-06 08:18 GMT
  • புதுவை ஏ.ஐ.டி.யூ.சி.யின் 20-வது மாநில மாநாடு இன்று வள்ளலார் சாலை பிரின்ஸ் அரங்கில் நடந்தது.
  • மாநாட்டுக்கு மாநில செயல்தலைவர் அபிஷேகம், மாநில தலைவர் தினேஷ்பொன்னையா தலைமை வகித்தனர்.

புதுச்சேரி:

புதுவை ஏ.ஐ.டி.யூ.சி.யின் 20-வது மாநில மாநாடு இன்று வள்ளலார் சாலை பிரின்ஸ் அரங்கில் நடந்தது.

மாநாட்டுக்கு மாநில செயல்தலைவர் அபிஷேகம், மாநில தலைவர் தினேஷ்பொன்னையா தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியை முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் ஏற்றினார். அகில இந்திய ஏ.ஐ.டி.யூ.சி.துணைத்தலைவர் எம்.பி.சுப்பராயன் மாநாட்டை தொடக்கவுரையாற்றினார்.

மாநில செயலாளர் சலீம், அகில இந்திய செயலாளர் வகிதா நிஜாம் சிறப்புரையாற்றினர். ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம் மாநாடு அறிக்கை சமர்பித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், ராமமூர்த்தி, ரவி, அந்தோணி, எழிலன் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து வரவு செலவு அறிக்கை சமர்பிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலில் புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை தன்னாட்சி அதிகாரம் கொண்ட முத்தரப்பு வாரியமாக மாற்ற வேண்டும். புதுவையில் ஏ.எப்.டி., சுதேசி, பாரதி உட்பட அனைத்து மில்களையும் இயக்க வேண்டும். அனைத்து தொழில்களுக்கும் குறைந்தபட்ச சம்பளத்தை காலத்திற்கேற்ப நிர்ணயம் செய்ய வேண்டும்.

புதுவை கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து நடத்த வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் புதுவை அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொழிலாளர்கள் பேரணி நடந்தது. அண்ணாசாலை, காமராஜர் சாலை, வள்ளலார் சாலை வழியாக வந்த பேரணி மாநாட்டு அரங்கத்தில் நிறைவு பெற்றது.

Tags:    

Similar News