புதுச்சேரி

பறிமுதல் செய்யப்பட்ட லோடு வேன்.

வேனில் மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2022-10-28 09:57 IST   |   Update On 2022-10-28 09:57:00 IST
  • வில்லியனூர் திருக்காஞ்சி அருகே சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
  • சங்கராபரணி ஆற்றுப்பகுதியில் ஒரு சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலையனுக்கு தகவல் வந்தது.

புதுச்சேரி:

வில்லியனூர் திருக்காஞ்சி அருகே சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி சாலை கணுவாபேட் சங்கராபரணி ஆற்றுப்பகுதியில் ஒரு சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலையனுக்கு தகவல் வந்தது.

இன்ஸ்பெக்டர் வேலையன் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் ரகசியமாக கண்காணித்ததில் லோடு வேனில் மணலை அள்ளிக்கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்தனர். சங்கராபரணி ஆற்று படுகையை சேதப்படுத்தி மணல் கொள்ளையில் ஈடுபட்ட கணுவா பேட் சிவப்பிரியா நகரை சேர்ந்த முத்து மகன் மரமா சூர்யா என்கிற பாலாஜி (வயது 23), சாமியார் தோப்பு மல்லிகா தியேட்டர் சாலையைச் சேர்ந்த அன்பழகன் மகன் பென்னி என்கிற மோகன்ராஜ் (வயது 26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட லோடு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சூர்யா மீது 2019, 2020, ஆகிய ஆண்டுகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வரும் சூர்யா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News