புதுச்சேரி

கோப்பு படம்.

கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2022-10-14 13:39 IST   |   Update On 2022-10-14 13:39:00 IST
  • புதுவை ரெட்டியார் பாளையம் லாம்பர்ட் சரவணன் நகர் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
  • அவரது சட்டை பையில் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது. மொத்தம் 110 கிராம் கஞ்சாவை அவர் பதுக்கி வைத்திருந்தார்.

புதுச்சேரி:

ரெட்டியார் பாளையம்-சாரம் பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுவை ரெட்டியார் பாளையம் லாம்பர்ட் சரவணன் நகர் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டிருந்த வாலிபரை பிடித்து அவரது சட்டை பையில் சோதனை நடத்தினர்.

அவரது சட்டை பையில் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது. மொத்தம் 110 கிராம் கஞ்சாவை அவர் பதுக்கி வைத்திருந்தார்.

இதையடுத்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஆதிச்சநல்லூர் மாதாகோவில் தெருவை சேர்ந்த குணசீலன் (21) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுபோல் சாரம் வெங்கடேஸ்வரா நகர் ஆட்டோ ஸ்டேண்டு பகுதியில் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பியோட முயன்றார். இதையடுத்து போலீசார் அவரது சட்டை பையில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அந்த வாலிபர் 24 பாக்கெட்டுகள் கொண்ட 180 கிராம் கஞ்சா வைத்திருந்தார். இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இதனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபு என்ற அப்பு (25) என்பதும் இவருடன் சண்முகாபுரத்தை சேர்ந்த மணி மற்றும் சாமி பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த அரிச்சந்திரன் ஆகியோரும் சேர்ந்து கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரபுவை போலீசார் கைது செய்தனர்.

மேலும் மணி மற்றும் அரிசந்திரன் ஆகியோரை தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட பிரபு ஏற்கனவே மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News