புதுச்சேரி
முதலியார்பேட்டை தொகுதி நைனார் மண்டபத்தில் சாலை மற்றும் வடிகால் வசதி அமைப்பதற்கான பூமி பூஜையை சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
15 லட்சத்தில் சாலை-வடிகால் வசதி பணி- சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- முதலியார்பேட்டை தொகுதியில் ரூ.15 லட்சத்தில் சாலை மற்றும் வடிகால் வசதி பணி சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- முதலியார்பேட்டை, நைனார் மண்டபம், சுதானா நகர் கமலம் வீதியில் புதிதாக சாலை மற்றும் வடிகால் வசதி செய்யும் பணி ரூ. 15.81 லட்சம் செலவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை, நைனார் மண்டபம், சுதானா நகர் கமலம் வீதியில் புதிதாக சாலை மற்றும் வடிகால் வசதி செய்யும் பணி ரூ. 15.81 லட்சம் செலவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில், புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலை பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.