வழிபாடு
புஞ்சை புளியம்பட்டியில் 10 கைகளுடன் 71 அடி உயரத்தில் பிரமாண்ட நவகாளியம்மன் சிலை

புஞ்சை புளியம்பட்டியில் 10 கைகளுடன் 71 அடி உயரத்தில் பிரமாண்ட நவகாளியம்மன் சிலை

Published On 2022-05-30 13:01 IST   |   Update On 2022-05-30 13:01:00 IST
நவகாளியம்மன் கோவில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள காராப்பாடி கிராமத்தில் நவகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் விநாயகர், நவகாளியம்மன், கருப்ப ராயனுக்கு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யயப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கோபுரம் புதிதாக கட்டப்பட்டு மூலவர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் இக்கோவிலில் தமிழகத்தில் முதன் முறையாக 10 கைகளுடன் 71 அடி உயரத்தில் பிரமாண்ட நவகாளியம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:-

தமிழகத்திலேயே முதன் முறையாக நவகாளியம்மனுக்கு இங்கு தான் 10 கைகளுடன் 71 அடி உயரத்திற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அம்மனை வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோவில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்னதாக இந்த பிரமாண்ட சிலையை ஏராளமான பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.
Tags:    

Similar News