வழிபாடு
ஜாத்திரை திருவிழா

புரசைவாக்கம் கொசப்பேட்டையில் கிராம தேவதைக்கு ஜாத்திரை திருவிழா

Published On 2022-04-23 12:30 IST   |   Update On 2022-04-23 12:30:00 IST
அம்மன் புற்றில் இருந்து எழுந்திருப்பது போலவும், கண்களை மூடி மூடி திறந்து அருள்பாலிப்பது போன்ற தொழில்நுட்பத்தில் வைத்திருந்தனர்.
சென்னை புரசைவாக் கத்தில் உள்ள கொசப்பேட்டையில் கிராம தேவதையாக ஆதி மொட்டையம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு வசிப்பவர்கள் ஆண்டுதோறும் ஆதி மொட்டையம்மனுக்கு ஜாத்திரை திருவிழா என்ற பெயரில் விழா எடுப்பது வழக்கம்.

இந்த விழாவுக்காக அங்கு வசிப்பவர்கள் அவரவர் வீட்டு வாசலில் அம்மனை உருவாக்கி வைத்திருப்பார்கள். அப்போது கோவிலில் உள்ள ஆதி மொட்டையம்மன் தேரில் உலா வந்து பக்தர்கள் உருவாக்கி வைத்துள்ள அம்மனை பார்த்து அருள்பாலிப்பார். கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் கொசப்பேட்டையில் ஜாத்திரை திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிலர் வீட்டு வாசலில் அம்மனை உருவாக்கி வைத்திருந்தனர். சிலர் கூட்டமாக சேர்ந்து பிரமாண்டமான முறையில் அம்மனை உருவாக்கி தெருமுனையில் வைத்திருந்தனர்.

அம்மன் புற்றில் இருந்து எழுந்திருப்பது போலவும், கண்களை மூடி மூடி திறந்து அருள்பாலிப்பது போன்ற தொழில்நுட்பத்தில் வைத்திருந்தனர். அங்குள்ள ஒரு வீட்டில் மண்பானைகளை கொண்டு அம்மனை வடிவமைத்திருந்தனர்.

இந்த ஜாத்திரை விழாவை பார்ப்பதற்கு சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களுக்கு அன்னதானம் மற்றும் வளையல் உள்ளிட்ட பிரசா தங்கள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவில் அனைத்து அம்மன் உருவங்களும் ஆதி மொட்டையம்மன் கோவில் குளத்தில் கரைக்கப்பட்டன.

Similar News