வழிபாடு
திருப்பதி கோவில்

திருப்பதியில் 5 நாட்கள் நடைபெறும் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ஆர்ஜித சேவைகள் ரத்து

Published On 2022-03-08 10:18 IST   |   Update On 2022-03-08 11:20:00 IST
தெப்பத் திருவிழாவை முன்னிட்டு சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை:

பங்குனி மாத பவுர்ணமியையொட்டி திருப்பதியில் வருடாந்திர தெப்ப உற்சவம் நடத்தப்படும்.

மார்ச் 17-ந்தேதி பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 13-ந்தேதி தெப்ப உற்சவத்தை தேவஸ்தானம் தொடங்க உள்ளது. அதைத் தொடர்ந்து 5 நாட்கள் தெப்ப உற்சவம் விழா நடைபெறுகிறது.

திருமலையில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. தெப்ப உற்சவத்தின் முதல் நாள் சீதா, லட்சுமண, ஆஞ்சநேய சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி ஊர்வலமும், 2-ம் நாள் ருக்குமணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் 3 சுற்றுகளாக ஊர்வலம் நடைபெறும்.

3-ம் நாள் முதல் 5-ம் நாள் வரை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான் தெப்பத்தில் வலம் வர உள்ளனர். நிறைவு நாளன்று ஏழு சுற்றுகள் தெப்பத்தில் சுவாமிகள் வலம் வர உள்ளனர்.

இந்த தெப்பத் திருவிழாவை முன்னிட்டு சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Similar News