செய்திகள்
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா 27-ந்தேதி தொடங்குகிறது
காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா வருகிற 27-ந்தேதி காலை சண்டி யாகத்துடன் தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.
காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் மாசிமாதம் நடைபெறும்.
அதன் படி இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி காலை சண்டி யாகத்துடன் விழா தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.
28-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு கொடியேற்றம், காலை வெள்ளி ரிபஷ வாகனம், மாலை தங்கமான் வாகனத்தில் அம்மன் நான்கு ராஜவீதிகளில் திருவீதிவுலா நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து பிரம்மோற்சவ விழா நிறைவு பெறும் நாள் வரை தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்கள் அருளிபாளிக்கிறார்.
மார்ச் 5-ந் தேதி தேரோட்டம் நடைபெறு கிறது. பிரம்மோற்சவத்தின் 11-ம் நாளான மார்ச் 8-ந் தேதி திருக்கோவில் தெப்பகுளத்தில் அம்மன் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. பகல் 12 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உள்ளுர் மற்றும் வெளியூரில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த ஆண்டு முதல் முதலாக பிரம்மோற்சவத்தின் போது தமிழர்களின் பாரம் பரியத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற உள்ளது.
உள்ளூர் மக்கள் மற்றும் காமாட்சி அம்மன் நற்பணி மன்றம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நவராத்திரி 9 நாட்கள் மட்டும் கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முதல் பிரம்மோற்சவத்தின் போது கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை கோவில் நிர்வாக அலுவலர் நாராயணன் தெரிவித்தார். அப்போது கோவில் நற்பணி மன்ற நிர்வாகிகள் ஆர்.வி.குப்பன், கணேசன், ஜீவானந்தம், ஆறுமுகம் உடனிருந்தனர்.