செய்திகள்
பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் விழா பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்மிக்க பண்ணாரி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான குண்டம் விழா பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்மிக்க பண்ணாரி அம்மன் கோவில் விழாவில் ஆண்டு தோறும் குண்டம் விழா சிறப்பாக நடக்கும்.
அதேபோல இந்த ஆண்டும் குண்டம் விழா சிறப்பாக நடக்கிறது. நேற்று நள்ளிரவு பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் குண்டம் விழா முறைப்படி தொடங்கியது. முன்னதாக கோவில் தலைமை பூசாரி படைகலம் (மாலை மற்றும் பூஜை பொருட்கள்) சுமந்து கோவிலுக்கு வந்தார். அப்போது ஏராளமான பக்தர்களும் ஊர்வலமாக வந்தனர்.
பூச்சாட்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் பலர் மேளம் அடித்தபடி வந்தனர். பிறகு தெப்பகுளம் அருகே சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
பூச்சாட்டு நிகழ்ச்சி முடிந்த கையோடு இன்று மாலை பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் உற்சவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு வீதி உலா வருகிறது.
பண்ணாரி சுற்றி உள்ள சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம், சத்தியமங்கலம் உள்பட பல்வேறு ஊர்களுக்கு அம்மன் சிலைகள் வீதி உலா நடக்கிறது. சிலைகளுக்கு முன் ஒவ்வொரு ஊர்களிலும் சாமி சிலைகள் முன் குவிந்து பக்தர்கள் வழிபடுவார்கள்.
27-ந் தேதி இரவு கோவிலில் கம்பம் சாட்டப்படுகிறது. இதையடுத்து ஒவ்வொரு மலை கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் அம்மன் புகழ் பாடி ஆடிப்பாடி மகிழ்வார்கள்.
பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் குண்டம் இறங்கி தீ மிதிக்கும் விழா ஏப்ரல் மாதம் 3-ந் தேதி அதிகாலை நடக்கிறது. கோவில் பூசாரிகள் முதலில் குண்டம் இறங்க நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தீ மிதிக்கிறார்கள்.
ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களும், கர்நாடக மாநில பக்தர்களும் என 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதிக்கிறார்கள்.
பக்தர்கள் தீ மிதித்த பிறகு அதே குண்டத்தில் மாடுகள், ஆடுகள் என கால்நடைகளும் குண்டம் இறங்கி தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.