செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா

Published On 2017-11-30 08:42 GMT   |   Update On 2017-11-30 08:42 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடக்கிறது. இதனை முன்னிட்டு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடக்கிறது. அதையொட்டி அன்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க மூலவர் வெங்கடாஜலபதி சன்னதி, வகுளமாதா தேவி சன்னதி, வரதராஜசாமி சன்னதி, லட்சுமிநரசிம்மசுவாமி சன்னதி, தங்கக்கொடி மரம், பலி பீடம் ஆகிய பகுதிகளிலும், கோவிலுக்கு வெளியே உள்ள பேடிஆஞ்சநேயர் கோவில், வராகசாமி கோவில், புஷ்கரணியின் நடுவே, நான்கு மாடவீதிகள், லட்டு கவுண்ட்டர்கள், நாத நீராஞ்ஜன மண்டபம் உள்பட பல்வேறு இடங்களில் தீபம் ஏற்றப்படுகிறது.

அந்த நேரத்தில் ஏழுமலையான் கோவிலில் சுமார் 3 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் அன்று நடக்கும் வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று நடக்கும் கருடசேவை உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது என்று திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News