செய்திகள்
இன்று கோலாகலமாக நடந்த சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்டம்
ஈரோடு மாவட்டத்தின் புகழ்பெற்ற முருகன் கோவிலான சென்னிமலையில் தைப்பூச தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் புகழ்பெற்ற முருகன் கோவிலான சென்னிமலையிலும் தைப்பூச விழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கடந்த 10 நாட்களாக சிறப்பு பூஜைகளுடன் விழா நடைபெற்று வருகிறது.
நாள் தோறும் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை உடன் சமேதராக அலங்கார வாகனங்களில் காட்சி அளித்து அருள்பாலித்தார்.
தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று இரவு வியாழக்கிழமை வசந்த மண்டபத்தில் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், நேற்று காலை 6.11 மணிக்கு கைலாசநாதர் கோயிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பாடும் நடந்தது. தேர்நிலையை சாமி 6. 32 க்கு வந்தடைந்தது.
பின் உற்சவ மூர்த்திகள் தேர் நிலையை மூன்று முறை வலம் வந்து சாமியை காலை 6.41 க்கு மூன்று தேர்களில் உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டனர். முதல் தேரில் விநயாகப்பெருமானும், பெரிய தேரில் முருப்பெருமான் அமர்தவள்ளி, சுந்தரவள்ளி சமேதராக தங்க கவச அலங்காரத்திலும், மூன்றாம் தேரில் நடராஜர் சமேதராக எழுந்தருளினாதர் அதை தொடர்ந்து கோவில் தலைமை குருக்கள் ராமநாதசிவம் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்று சுவாமி தரிசனம் நடந்தது.
இதை அடுத்து காலை 6.43 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரன், ஆர்.டி.ஓ., நர்மாததேவி, ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதை தொடந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தனர்.
அப்போது அவர்கள் கந்தனுக்கு ‘அரஹரா அரஹரா ’ முருகனுக்கு ‘அரஹரா அரஹரா ’ என்று பக்தி கோஷம் எழுப்பினர். வழி நெடுக திரண்டு இருந்த பக்தர்கள் தேர் மீது உப்பு மிளகு தூவியும், கடலைகாய், நெல் தூவியும் முருகப்பெருமானை வழிபட்டனர்.