செய்திகள்

ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குவிந்து தரிசனம்

Published On 2017-01-16 10:00 GMT   |   Update On 2017-01-16 10:00 GMT
ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் குவிந்து நீண்ட வரிசையில் நின்று தீர்த்தங்களில் நீராடினர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.

சபரிமலையில் நேற்று முன்தினம் மகரஜோதி தரிசனம் நடந்தது. இதில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ் நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மகரஜோதியை தரிசித்தனர்.

இதைத்தொடர்ந்து பக்தர்கள் அங்கிருந்து கார், வேன், பஸ்களில் தமிழகத் தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு படையெடுத்தனர். ராமேசுவரத்திலும் நேற்று மாலை முதல் ஆயிரக்கணக்கான கார், பஸ், வேன்களில் ஐயப்ப பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள் இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடலில் நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகை அதி கரித்ததையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண் மணி வண்ணன் உத்தரவின் பேரில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகையா தலைமையில் போலீஸ்காரர்கள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

Similar News