உலகம்

VIDEO: 12,000 ஆண்டுகளுக்கு பின் எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை.. இந்தியாவை நோக்கி நகரும் புகை

Published On 2025-11-24 22:48 IST   |   Update On 2025-11-24 22:48:00 IST
  • எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருகிறது.
  • தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து 500 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு எரிமலை 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்துள்ளது.

தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து 500 மைல் தொலைவில் அமைந்துள்ள ஹைலே குப்பி எரிமலை இன்று வெடித்துள்ளது. இதனால் எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருகிறது.

எரிமலை வெடிப்பால் லாவா எரிமலை குழம்பும் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

எரிமலையிலிருந்து சாம்பல் மேகங்கள் இந்தியா, ஏமன், ஓமன் மற்றும் வடக்கு பாகிஸ்தான் நோக்கி நகர்ந்து வருகின்றன.  

இந்த எரிமலை வெடிப்பில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தியாவில் விமானப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கண்ணூரில் இருந்து அபுதாபிக்கு சென்ற இண்டிகோ விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. அதேபோல் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.  

Tags:    

Similar News