உலகம்

மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இந்தியாவுக்கு மிக அருகே பயங்கரவாத மையம் அமைந்துள்ளது - பாகிஸ்தானை சாடிய ஜெய்சங்கர்

Published On 2023-01-03 00:59 GMT   |   Update On 2023-01-03 00:59 GMT
  • ஆஸ்திரியா நாட்டில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
  • இந்தியாவுக்கு மிக அருகே பயங்கரவாதத்தின் மையம் அமைந்துள்ளது என பாகிஸ்தானை சாடினார்.

வியன்னா:

ஆஸ்திரியா நாட்டில் மத்திய வெளிவிவகாரத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அந்நாட்டின் வெளிவிவகார மந்திரியான அலெக்சாண்டர் ஸ்காலென்பர்க்கை சந்தித்துப் பேசினார். அதன்பின் இரு நாட்டு மந்திரிகளும் கூட்டாகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:

பயங்கரவாதத்தினால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை பற்றி ஆஸ்திரிய நாட்டு தலைவர்களுடன் பேசினேன். எல்லை கடந்த பயங்கரவாதம், வன்முறை, தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் உள்ளிட்டவற்றை பற்றியும் நாங்கள் விரிவாக பேசினோம்.

போதை பொருட்கள், சட்டவிரோத ஆயுத விற்பனை மற்றும் பிற வடிவிலான சர்வதேச குற்றங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று ஆழ்ந்த தொடர்பில் இருக்கும்போது, மேற்குறிப்பிட்ட பயங்கரவாத விளைவுகளை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அடக்கிவிட முடியாது.

இந்த பயங்கரவாதத்தின் மையம் இந்தியாவுக்கு மிக அருகே அமைந்துள்ளது. எங்களுடைய அனுபவங்கள் மற்றும் பார்வைகள் பிறருக்கு பயனுள்ளவையாக இருக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News