உலகம்

பாகிஸ்தானுக்கு உளவுக்கப்பலை வழங்கி சீனா உதவி

Published On 2024-03-17 05:26 GMT   |   Update On 2024-03-17 05:26 GMT
  • சிறப்பு ஆராய்ச்சி கப்பல் என்ற பெயரில் அந்த கப்பலை உருவாக்க பாகிஸ்தானுக்கு சீனா அதிகளவில் உதவியுள்ளது.
  • சீனா தனது உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்தியது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் கடற்படையில் முதல் உளவு கப்பல் சேர்க்கப்படுகிறது. இதற்காக பாகிஸ்தானுக்கு சீனா உதவிகளை வழங்கியுள்ளது.

பி.என்.எஸ். ரிஸ்வான் என்ற 87 மீ நீளமுள்ள இந்த கப்பல், ஏவுகணைகள் ஏவுவதை கண்காணிப்பது, உளவுத் துறையின் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ளும் திறனை கொண்டதாகும்.

சிறப்பு ஆராய்ச்சி கப்பல் என்ற பெயரில் அந்த கப்பலை உருவாக்க பாகிஸ்தானுக்கு சீனா அதிகளவில் உதவியுள்ளது.


நவீன வசதிகள் கொண்ட இதுபோன்ற, கப்பல்களை அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷியா, பிரான்ஸ் ஆகிய ஒரு சில நாடுகள் மட்டுமே வைத்துள்ளன. தற்போது பாகிஸ்தானுக்கு அந்த கப்பலை சீனா வழங்கி உள்ளது.

ஏற்கனவே சீனா தனது உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்தியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சமீபத்தில் மாலத்தீவுக்கு சீனாவின் உளவுக்கப்பல் வந்து சென்றுள்ளது. மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல் சுற்றி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு கப்பலை வழங்கி சீனா உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News