உலகம்

எகிப்தில் ரெயில் தடம் புரண்டு விபத்து- இருவர் உயிரிழப்பு

Published On 2023-03-08 04:26 GMT   |   Update On 2023-03-08 04:26 GMT
  • படுகாயமடைந்தவர்களை மீட்க சம்பவ இடத்திற்கு சுமார் 20 ஆம்புலன்ஸ்கள் விரைந்தன.
  • ரெயில் தடம் புரண்டதற்கான காரணத்தைக் கண்டறிய குழு அமைக்க உத்தரவு.

எகிப்தின் கெய்ரோவில் நேற்று ரெயில் ஒன்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், 16 பேர் காயமடைந்துள்ளாதகவும் எகிப்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே படுகாயமடைந்தவர்களை மீட்க சம்பவ இடத்திற்கு சுமார் 20 ஆம்புலன்ஸ்கள் விரைந்தன. மேலும், ரெயில் தடம் புரண்டதற்கான காரணத்தைக் கண்டறியவும், இதற்கு பொறுப்பானவர்களைக் கண்டறியவும் ஒரு குழுவை அமைக்குமாறு எகிப்து போக்குவரத்து அமைச்சர் கமெல் எல்-வசீர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக எகிப்து போக்குவரத்து அமைச்சகம், கலியுப்பில் உள்ள ரெயில் நிலைய நடைமேடை அருகே ரெயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தை அறிக்கையின் மூலம் உறுதி செய்துள்ளது.

Tags:    

Similar News