உலகம்

இலங்கையில் போராட்டக்காரர்கள் 2 குழுக்களாக மோதல்- 10 பேருக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-07-12 15:09 IST   |   Update On 2022-07-12 15:09:00 IST
  • போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குகள் புகுந்து சூறையாடினார்கள்.
  • அலரி மாளிகையில் 2 குழுக்களுக்கு இடையில் தீவிர மோதல் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குகள் புகுந்து சூறையாடினார்கள். மேலும் அலரி மாளிகை, தலைமை செயலகம் ஆகியவற்றையும் போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு போராட்டக்காரர்கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் அலரி மாளிகையில் 2 குழுக்களுக்கு இடையில் தீவிர மோதல் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2 குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த சம்பவத்தினால் காயம் அடைந்த பெண் ஒருவரின் கழுத்து வெட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அலரி மாளிகையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News