உலகம்

திருமண விருந்தில் நாற்காலிகளை வீசி சண்டை போட்ட உறவினர்கள்

Published On 2023-09-01 15:12 IST   |   Update On 2023-09-01 15:12:00 IST
  • மோதலை தடுக்க சிலர் முயன்ற நிலையிலும் அது கைகொடுக்கவில்லை.
  • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கேலியாகவும், விமர்சனம் செய்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

பாகிஸ்தானில் நடைபெற்ற திருமண விருந்து நிகழ்ச்சியில் உறவினர்கள் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி சண்டை போட்ட வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

கடந்த 24-ந்தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு வந்தவர்கள் மேஜைகளில் அமர்ந்து விருந்து உணவை ரசிப்பதில் இருந்து வீடியோ தொடங்குகிறது. சிறிது நேரத்தில் உறவினர்களுக்கு இடையே தகராறு ஏற்படுகிறது. உடனே ஒருவரையொருவர் தாக்குகிறார்கள். பின்னர் சண்டை தீவிரமாகி ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்கும் காட்சிகள் பயனர்களை அதிர்ச்சி அடைய செய்கிறது.

மோதலை தடுக்க சிலர் முயன்ற நிலையிலும் அது கைகொடுக்கவில்லை. மாறாக மோதல் தீவிரமாவது போன்று காட்சிகள் உள்ளது. 6 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ 3.3 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கேலியாகவும், விமர்சனம் செய்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News