உலகம்

மலையேற்றத்திற்காக சென்ற போது கரடியிடம் சிக்கிய நபர்- மரத்தில் ஏறி தப்பிய வீடியோ வைரல்

Published On 2023-08-12 10:35 IST   |   Update On 2023-08-12 10:35:00 IST
  • டுவிட்டரில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
  • ஒரு சில பயனர்கள் கேலியாகவும், சில பயனர்கள் கேமிராவை எப்படி சரியாக அமைத்தார்கள் என கேள்வி எழுப்பியும் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.

மலையேற்றம் சென்ற ஒருவர் கரடியிடம் மாட்டிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'சிசிடிவி இடியட்ஸ்' என்ற டுவிட்டர் பதிவில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஒருவர் காட்டுக்குள் மலையேற்றத்திற்காக நடந்து செல்கிறார். அப்போது அங்கு கரடி வந்ததை பார்த்ததும் அந்த நபர் கரடியிடம் இருந்து தப்பிப்பதற்காக மரத்தில் ஏறுகிறார். பின்னால் சென்ற கரடியும் மரத்தில் ஏறி அவரை கடிக்க முயல்கிறது. ஆனால் அந்த நபர் வேகமாக மரத்தின் மேலே ஏறி விட்டதால் கரடி கீழே இறங்குவது போன்று காட்சிகள் உள்ளது.

டுவிட்டரில் வைரலான இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் அந்த நபர் கரடியிடம் பிடிபட்டால்...? என கேட்டுள்ளார். ஒரு சில பயனர்கள் கேலியாகவும், சில பயனர்கள் கேமிராவை எப்படி சரியாக அமைத்தார்கள் என கேள்வி எழுப்பியும் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.

Tags:    

Similar News