உலகம்

ரஷிய போரில் கொல்லப்பட்ட 210 உக்ரைன் வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு

Published On 2022-06-08 04:50 GMT   |   Update On 2022-06-08 09:14 GMT
  • மரியு போல் நகரில் ரஷிய படையிடம் ஆயிரம் உக்ரைன் வீரர்கள் சரண் அடைந்தனர். அவர்கள் ரஷியா அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  • ஒப்படைக்கப்பட்ட வீரர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

மரியுபோல், ஜூன். 8-

உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி 100 நாட்களை கடந்துவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. ரஷிய வீரர்களை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் ஆக்ரோஷத்துடன் போர் செய்து வருகிறார்கள்.

இந்த போரில் இருதரப்பி லும் கடுமையான உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள துறைமுகநகரான மரியுபோல், கெர்சன் உள்ளிட்ட நகரங்களை ரஷியா தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. தற்போது கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்றுவதில் ரஷியா மும்முரம் காட்டி வருகிறது.

இதனால் கடந்த சில நாட்களாக இங்குள்ள சியெவெரோ டொனட்ஸ்கி, லுஹான்ஸ்ட் நகரங்கள் மீது ரஷிய படைகள் கண் மூடித்தனமாக தாக்கி வருகிறது. 24 மணிநேரமும் இந்த நகரங்கள் மீ து குண்டு மழையினை பொழிந்து வருகிறது. இதில் பள்ளி- கல்லூரி கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து சேதமானது.

இந்த நகரங்களை முற்றி லும் அழிக்கும் முயற்சியில் ரஷியா முழுமூச்சில் இறங்கி உள்ளது. உக்ரைனின் கிழக்கு பிராந்திய பகுதி களை 97 சதவீதம் கைப்பற்றி விட்டதாக ரஷியா அறி வித்து உள்ளது.

இந்த நிலையில் மரியு போல் நகரில் ரஷிய படையிடம் ஆயிரம் உக்ரைன் வீரர்கள் சரண் அடைந்தனர். அவர்கள் ரஷியா அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் மரியுபோல் நகரில் இரும்பு ஆலை மீது கடந்த 3 மாதங்களாக ரஷியா கடுமையான தாக்குதலை நடத்தியது. வான்வெளி மற்றும் கடல் வழியாக நடந்த இந்த போரில் பலர் கொல்லப்பட்டனர்.

இதில் மரணம் அடைந்த 210 உக்ரைன் வீரர்கள் உடல்களை ரஷியா ஒப்படைத்து உள்ள தாக அந்தநாட்டின் ராணுவ புலனாய்வு ஏஜென்சி தெரிவித்து உள்ளது. ஆனால் அந்த இரும்பு ஆலையில் இன்னும் எத்தனை வீரர்களின் உடல்கள் உள்ளது என தெரியவில்லை என்று அந்த ஏஜென்சி தெரிவித்து இருக்கிறது.

ஒப்படைக்கப்பட்ட வீரர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

Tags:    

Similar News