உலகம்

அமெரிக்காவில் 'இயான்' புயலில் சிக்கி 25 லட்சம் மக்கள் தவிப்பு

Published On 2022-09-30 09:34 GMT   |   Update On 2022-09-30 09:34 GMT
  • இயான் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
  • பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து முடங்கியது.

நியூயார்க்:

அமெரிக்காவின் புளோரிடா மற்றும் தென்கிழக்கு அட்லாண்டிக் கடலோர பகுதிகளை 'இயான்' புயல் கடந்த 27-ந் தேதி தாக்கியது. அந்த புயல் அமெரிக்காவை தாக்கிய போது மணிக்கு 665 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

இது அமெரிக்காவை தாக்கிய மிக உக்கிரமான புயல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இயான் புயல் கடந்து சென்ற பாதைகளில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது.

இந்த புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து முடங்கியது. கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் தடைபட்டது.

இயான் புயல் காரணமாக அமெரிக்காவில் மின்சாரம் இன்றியும், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமலும் சுமார் 25 லட்சம் பேர் தவித்து வருகிறார்கள். புயல் தாக்கி 3 நாட்கள் ஆகியும் அனைத்து பகுதிகளும் இருளில் மூழ்கி கிடக்கிறது.

Tags:    

Similar News