உலகம்

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி-சிரியாவுக்கு உலக நாடுகள் உதவி

Published On 2023-02-07 12:30 IST   |   Update On 2023-02-07 12:30:00 IST
  • நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா நாட்டுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளது.
  • காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக துருக்கியில் தற்காலிக ஆஸ்பத்திரி அமைத்து கொடுக்க இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்து உள்ளது.

அங்காரா:

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா நாட்டுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளது. மீட்பு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொண்டு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்து உள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை துல்லியமாக கண்டுபிடிப்பதற்காக 76 பேரும் மீட்பு பணி நிபுணர்கள் 4 பேரும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள். உபகரணங்கள். 400 ரக ராணுவவிமானம், மற்றும் பணியாளர்களை அனுப்பி வைத்து உள்ளது. போலந்து நாடு 76 தீயணைப்பு வீரர்கள், மற்றும் நன்கு பயிற்சி பெற்ற மோப்பநாய்கள், நவீன கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக துருக்கியில் தற்காலிக ஆஸ்பத்திரி அமைத்து கொடுக்க இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்து உள்ளது.இஸ்ரேல் நாடு 150 என்ஜீனியர்கள் கொண்ட மீட்பு படை, மருத்துவ பணியாளர்கள், உதவி பொருட்களை அனுப்பி வைத்து உள்ளது. இந்தியாவும் 2 கட்டமாக மீட்பு குழுவினரை இன்று துருக்கி அனுப்பியது. இதே போல ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ் உக்ரைன், போலந்து கத்தார், செர்பியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவி செய்துள்ளன.

Tags:    

Similar News