உலகம்

அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது தாக்குதல்- திரும்பி போ என்று கூச்சல்

Published On 2022-08-26 10:54 IST   |   Update On 2022-08-26 11:40:00 IST
  • ஒரு பெண்ணுக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.
  • மெக்சிகோவை சேர்ந்த பெண் என்று தெரிய வந்துள்ளது.

டெக்சாஸ்:

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு விடுதி ஒன்றில் 4 இந்திய பெண்கள் கார் நிறுத்தும் பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒரு பெண் அவர்களை பார்த்து ஆவேசமாக கூச்சலிட்டார். இந்தியாவில் தான் எல்லா வசதியும் இருக்கிறதே பிறகு ஏன் அமெரிக்கா வந்தீர்கள் என்று கத்தினார்.

திடீரென அவர் இந்திய பெண்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டார். அதில் ஒரு பெண்ணுக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. 3 பெண்கள் லேசான காயம் அடைந்தனர்.

இந்திய பெண்கள் தாக்கப்பட்டதை ஒருவர் வீடியோவில் பதிவு செய்தார். 5 நமிடம் ஓடும் அந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து தாக்குதல் நடத்திய பெண் கைது செய்யப்பட்டார். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அவர் மெக்சிகோவை சேர்ந்த பெண் என்று தெரிய வந்துள்ளது.

Similar News