உலகம்

கியூபாவை தொடர்ந்து புளோரிடா மாகாணத்தை புரட்டிப்போட்ட இவான் புயல்- படகு கவிழ்ந்து 23 பேர் மாயம்

Update: 2022-09-29 07:54 GMT
  • புளோரிடா மாகாணத்தின் தென்மேற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் காற்றில் கவிழ்ந்ததும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

கரீபியன் கடலில் உருவான இவான் என்ற சூறாவளி புயல் கியூபா நாட்டின் மேற்கு பகுதிகளை தாக்கியது. மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடந்தது. அப்போது பலத்த மழையும், சூறாவளி காற்றும் வீசியது. புயல் தாக்குதலால் அப்பகுதி கடும் சேதத்தை சந்தித்துள்ளது. நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கியூபாவை தாக்கிய இவான் புயல் அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையை நோக்கி நகர்ந்தது. அந்த புயல் புளோரிடாவின் தென்மேற்கு கடலோர பகுதிகளை தாக்கியது. சூறாவளியின் கண் பகுதி போர்ட் மியர்ஸ் நகருக்கு மேற்கே உள்ள கேயோ சோஸ்டா தீவை தாக்கி கரை கடந்தது. அதனால் தொடக்கத்தில் 240 கி.மீ. வேகத்திலும், பின்னர் சற்று வலுவிழந்து மணிக்கு 168 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசியது. இதில், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. புயல் காரணமாக கனமழை பெய்தது. பல இடங்களில் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் காற்றில் கவிழ்ந்ததும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. விமான நிலையத்தில் விமானங்கள் சேதம் அடைந்துள்ளன.

புளோரிடா மாகாணத்தில் 20 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகிறார்கள். புளோரிடா மாகாணத்தின் தென்மேற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜார்ஜியா, தென் கரோலினாவிலும் புயல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

புயல் தாக்குதலையடுத்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் கூறும்போது, "இது மோசமான நாள். இதை இன்னும் இரண்டு நாட்கள் அனுபவிக்க போகிறோம்" என்றார். இதற்கிடையே கியூபாவில் இருந்து வந்த அகதிகள் படகு புளோரிடா கடலில் புயலில் சிக்கி கவிழ்ந்தது. இதில் 23 பேர் மாயமாகி உள்ளனர்.

Tags:    

Similar News