உலகம்

ஆப்கானிஸ்தானில் சமூக ஊடக பிரபலங்கள் அதிரடி கைது- தலிபான்கள் நடவடிக்கை

Published On 2023-02-20 07:00 GMT   |   Update On 2023-02-20 07:00 GMT
  • பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
  • அரசுக்கு எதிராக வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

காபூல்:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தலிபான்கள் எந்த நேரமும் காபூல் நகர வீதிகளில் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடனே வசித்து வருகின்றனர். பலர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி பக்கத்து நாடான துருக்கி உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

தற்போது தலிபான்களின் பார்வை சமூக ஊடக பிரபலங்கள் மீது திரும்பி உள்ளது. தலிபான்களுக்கு எதிராக உள்ளவர்கள் பேஸ்புக்கில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். காபூலை சேர்ந்த இம்ரான் அமகத் சாய் என்பவரை சமூக வலை தளங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அவர் தனது பேஸ் புக்கில் ஆப்கான் மக்களை தலிபான்கள் துருக்கியை நோக்கி துரத்துவதாகவும் இதனால் காபூல் நகர வீதிகளில் பொதுமக்கள் பயத்தில் விமான நிலையத்தை நோக்கி ஓடுவதாகவும் கூறி வீடியோ வெளியிட்டதாக தெரிகிறது. .இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து தலிபான் அரசு காபூலில் உள்ள வீட்டில் இருந்த இம்ரானை அதிரடியாக கைது செய்தனர்.இதேபோல மற்றொரு சமூக ஊடக பிரபலமான அப்துல் ரகுமான் என்பரும் கைது செய்யப்பட்டார்.அரசுக்கு எதிராக வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். சமூக ஊடக பிரபலங்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் கடந்த ஆட்சியின் போது பாதுகாப்பு படையில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News