தாலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அடுத்த வாரம் இந்தியா வருகை!
- 4 ஆண்டுகளாக இடைக்கால அரசு நடத்தி வரும் தாலிபான்கள் தங்கள் ஆட்சிக்கு சர்வதேச அங்கீகாரம் கோரி வருகின்றனர்.
- ஐ.நாவின் சர்வதேச பாதுகாப்பு ஆணையம் தடைகள் காரணமாக, முத்தாகிக்கு சர்வதேச பயணத்திற்கு சிறப்பு அனுமதி தேவைப்பட்டது.
2021 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் முதல் முறையாக, அதன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வமாக வருகை தருகிறார்.
4 ஆண்டுகளாக இடைக்கால அரசு நடத்தி வரும் தாலிபான்கள் தங்கள் ஆட்சிக்கு சர்வதேச அங்கீகாரம் கோரி வருகின்றனர்.
இந்நிலையில் முத்தாகி அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்தியா வருகின்றார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் இரு நாட்டு உறவுகள், புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தானுடன் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான் அமைச்சர் முத்தாகி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஐ.நாவின் சர்வதேச பாதுகாப்பு ஆணையம் தடைகள் காரணமாக, முத்தாகிக்கு சர்வதேச பயணத்திற்கு சிறப்பு அனுமதி தேவைப்பட்டது.
சமீபத்தில் முத்தகியின் சில பயணங்களுக்கு ஒப்புதல் மறுக்கப்பட்ட நிலையில் இந்த முறை இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் சர்வதேச பாதுகாப்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.