உலகம்

மைத்ரிபால சிறிசேனா

ஈஸ்டர் குண்டுவெடிப்பு - இலங்கை முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா சந்தேக நபராக அறிவிப்பு

Published On 2022-09-17 03:40 IST   |   Update On 2022-09-17 03:40:00 IST
  • ஈஸ்டர் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 270 பேர் கொல்லப்பட்டனர்.
  • மைத்ரிபால சிறிசேனா அக்டோபர் 14-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கொழும்பு:

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டின் ஈஸ்டர் நாள் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 270 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த குண்டுவெடிப்பு உலகம் முழுவதும் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தேக நபராக இலங்கை கோர்ட்டு அறிவித்துள்ளது. இலங்கையில் இதுபோன்ற தாக்குதல் நடைபெறவுள்ளதாக தாக்குதலுக்கு முன்னதாகவே அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. உளவுத்துறையின் இந்த எச்சரிக்கை அறிக்கைகளை மைத்ரிபால சிறிசேனா புறக்கணித்ததாக கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டு நீதிபதிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த வழக்கில் அக்டோபர் 14-ம் தேதி மைத்ரிபால சிறிசேனா கோர்ட்டில் நேரில் ஆஜராக கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.

Similar News