உலகம்

தென்கொரியாவில் எதிர்க்கட்சி தலைவருக்கு கத்திக்குத்து

Published On 2024-01-02 03:01 GMT   |   Update On 2024-01-02 03:01 GMT
  • மர்மநபர் ஆட்டோகிராஃப் கேட்பது போன்று அருகில் வந்து கத்தியால் தாக்கியுள்ளார்.
  • துப்பாக்கி கையாள்வதற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், கத்தி போன்ற ஆயுதங்களால் வன்முறை.

தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவரான லீ ஜே-மியுங்கை மர்ம நபர் திடீரென கழுத்தில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயக கட்சியின் தலைவரும், தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவருமான லீ ஜே-மியுங் தெற்கு துறைமுக நகரமான புசன் சென்றுள்ளார். அங்குள்ள விமான நிலையத்தை சுற்றி பார்க்கும்போது மர்ப நபரால் தாக்கப்பட்டுள்ளார்.

மர்ப நபர் லீ ஜே-மியுங்கிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதுபோல் அருகில் வந்துள்ளார். அருகில் வந்ததும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லீயின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் லீ ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் ரத்தம் வெளியாறாமல் இருக்க தங்களது கைக்குட்டைகளால் அழுத்தி பிடித்துள்ளனர். உடனடியாக சிகிச்சைக்கான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தென்கொரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட மர்ம நபர் சம்பவ இடத்திலேயே பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்கொரியால் துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலயைில், மற்றவகை ஆயுதங்களால் அரசியல் வன்முறை நிகழ்ந்து வருகின்றன.

Tags:    

Similar News