உலகம்

முட்டை விலை கிடுகிடு உயர்வு: மன்னிப்பு கேட்ட புதின்

Published On 2023-12-16 05:26 GMT   |   Update On 2023-12-16 06:56 GMT
  • உக்ரைன் மீது போர் தொடங்கிய பிறகு முட்டை விலை கிடுகிடுவென உயர்வு.
  • ஒரு டஜன் முட்டை 1.4 டாலருக்கும் அதிகமான விலைக்கு விற்பனை.

ரஷிய அதிபர் புதின் வருடத்தின் இறுதியில் மீடியாக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் நேரடியாக உரையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்.

அப்போது பென்சன் வாங்கும் முதியவர் ஒருவர் புதினிடம் முட்டை விலை, கோழி இறைச்சி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக தனது வேதனையை தெரிவித்தார்.

பென்சன் வாங்கும் முதியவர் இப்படி தெரிவித்தவும், இதற்காக "நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இது அரசாங்க பணியின் தோல்வி. எதிர்காலத்தில் இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு சூழ்நிலை சரியாகும் என நான் உறுதியளிக்கிறேன்" என்றார்.

ரஷியாவில் பணவீக்கம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கிய பிறகு முட்டையின் விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் பல்வேறு தடைகள் விதித்துள்ளதால் முட்டை உற்பத்தியாளர்கள் கோழி தீவனம் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும், இறக்குமதி வரியை உயர்த்தியதும் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இறக்குமதி வரியை 1.2 பில்லியன் முட்டைகளுக்கான வரியில் விலக்கு அளிக்க இருப்பதாக ரஷியா அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News