உலகம்

கனடாவிடம் மன்னிப்பு கோரிய இளவரசர் ஹாரி: காரணம் இதுதான்

Published On 2025-11-08 05:13 IST   |   Update On 2025-11-08 05:13:00 IST
  • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பேஸ்பால் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது.
  • இதைப் பார்ப்பதற்காக ஹாரி தனது மனைவி மேகனுடன் சென்றிருந்தார்.

வாஷிங்டன்:

இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஹாலிவுட் நடிகை மேகனை திருமணம் செய்தபிறகு அரச குடும்பத்தை விட்டு வெளியேறினார். அதன்பின், தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இதற்கிடையே, கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பேஸ்பால் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரின் 4-வது போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்ஸ் அணியும், கனடாவின் டொராண்டோ ப்ளூ ஜேஸ் அணியும் மோதின.

இதனை பார்ப்பதற்காக ஹாரி தனது மனைவி மேகனுடன் சென்றிருந்தார். அப்போது அவர்கள் இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்சின் தொப்பியை அணிந்திருந்தனர். இதற்கு காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள கனடாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

ஏனெனில் காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக இங்கிலாந்து மன்னர் சார்லஸ் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அவரது மகனான இளவரசர் ஹாரி அமெரிக்க அணிக்கு ஆதரவாக தொப்பியணிந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் அணியின் தொப்பி அணிந்ததற்காக இளவரசர் ஹாரி கனடாவிடம் மன்னிப்பு கோரி உள்ளார்.

Tags:    

Similar News