உலகம்

ராணுவ தளபதி ஆசிம் முனீர்

இந்தியாவுடன் போரிட தயார் - எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான் ராணுவ தளபதி

Update: 2022-12-03 22:32 GMT
  • பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக ஆசிம் முனீர் கடந்த 24-ம் தேதி பொறுப்பேற்றார்.
  • ஜம்மு காஷ்மீர் குறித்து இந்திய தலைமையிடமிருந்து பொறுப்பற்ற கருத்துக்கள் வருகின்றன என கூறினார்.

லாகூர்:

பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக ஆசிம் முனீர் கடந்த 24-ம் தேதி பொறுப்பேற்றார். ராணுவ தளபதியாக பொறுப்பேற்றதை அடுத்து ஆசிம் முனீர் முதல் முறையாக இந்தியாவுடனான எல்லைப் பகுதியை நேற்று பார்வையிட்டார்.

இந்நிலையில், ரக்‌ஷிக்ரி பகுதி இந்தியாவுடனான எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுடன் உரையாடினார். அதன் பின் ஆசிம் முனீர் பேசியதாவது:

கில்கித் பல்கிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் குறித்து சமீபத்தில் இந்திய தலைமையிடமிருந்து பொறுப்பற்ற கருத்துகள் வருவதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.

எங்கள்மீது போர் திணிக்கப்பட்டால் தாய்நாட்டின் ஒவ்வொரு இன்ச் பகுதியையும் பாதுகாக்க மட்டுமின்றி எதிரிகளை எதிர்த்துப் போரிடவும் பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News