உலகம்

இந்தியாவால் பெரும் சேதம்.. சர்வதேச நாடுகளிடம் கூடுதல் கடன் கேட்ட பாகிஸ்தான் அரசு - ஆனால்..

Published On 2025-05-09 10:30 IST   |   Update On 2025-05-09 10:44:00 IST
  • நேற்று இரவு முழுவதும் இந்திய பகுதிகளில் பாகிஸ்தானும், பாகிஸ்தான் பகுதிகளில் இந்தியாவும் தாக்குதல் நடத்தின.
  • சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடன்களுக்காக பாகிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் இந்திய பகுதிகளில் பாகிஸ்தானும், பாகிஸ்தான் பகுதிகளில் இந்தியாவும் தாக்குதல் நடத்தின.

இதற்கிடையே ஏற்கனவே பொருளாதர ரீதியாக பாதிக்கப்பட்டு பாகிஸ்தான் உலக வங்கி மற்றும் உலக நாடுகள் உதவி பெற்று வரும் சூழலில் தற்போது ஏற்பட்ட மோதல் அந்நாட்டுக்கு பெரிய அடியாக மாறியுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவால் ஏற்பட்ட பெரும் இழப்புகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் அரசு நட்பு நாடுகளிடம் கூடுதல் கடன்களைக் கோருகிறது.

பாகிஸ்தான் அரசின் பொருளாதார விவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "எதிரிகளால் ஏற்பட்ட பெரும் இழப்புகளுக்குப் பிறகு, சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடன்களுக்காக பாகிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுக்கிறது.

அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியில், சர்வதேச கூட்டாளிகள் பொருளாதார நெருக்கடியைக் குறைக்க உதவுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதை மறுத்துள்ள பாகிஸ்தான் அரசு, தங்கள் பொருளாதர அமைச்சகத்தின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News