உலகம்
குண்டு வெடிப்பு வழக்கு: மரண தண்டனை மற்றும் 300 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை விடுதலை செய்தது லாகூர் நீதிமன்றம்
- 2014 ஆண்டு வாகா எல்லை அருகே நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
- 3 பேருக்கு தூக்குத்தண்டனை மற்றும் 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தானின் வாகா எல்லையில் கடந்த 2014ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் கடத்தப்பட்டது. இதில் 60 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை தடை செய்யப்பட்ட ஜமாத்-அல்-அஹ்ரார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் 300 ஆண்டுகள் தண்டனையும் வழங்கப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த தீர்பை எதிர்த்து 3 பேருக்கும் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலயைில் லாகூர் உயர்நீதிமன்றம் மூன்று பேரின் தூக்குத்தண்டனை மற்றும் ஜெயில் தண்டனையை ரத்து செய்து, அவர்களை விடுதலை செய்த உத்தரவிட்டுள்ளது. தற்கொலை படையாக செயல்பட்டவர்களுக்கு உதவியதாக இந்த மூன்று பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.