உலகம்

இம்ரான் கான் சகோதரிக்கு ஜாமீனில் வரமுடியாத வாரண்ட் பிறப்பித்தது பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம்

Published On 2025-10-22 19:19 IST   |   Update On 2025-10-22 19:19:00 IST
  • கடந்த ஆண்டு நடந்த இம்ரான் கான் கட்சி போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
  • தொடர்ந்து ஆஜராகாத நிலையில் ஜாமீனில் வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராக நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி அலீமா கானுக்கு ராவல்பிண்டி பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் 4ஆவது முறையாக ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ0இன்சாஃப் கட்சி நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கில் அலீமா கான் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது 11 பேரில் 10 பேர் ஆஜரான நிலையில், அலீமான கான் மட்டும் ஆஜராகவில்லை. இதனால் 4ஆவது முறையாக வாரண்ட் பிறப்பித்துள்ளது.

மேலும், ராவல் டிவிசன் எஸ்.பி. மற்றும் டிஎஸ்பி ஆகியோருக்கு போலி அறிக்கை தாக்கல் செய்ததற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்கள் அலீமா கான் தலைமறைவாக உள்ளார் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ள ஜெயில் மற்றும் சமூக வலைத்தள சேனல்களில் காணப்பட்டதால் நீதிமன்றம் போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த விசாரணையின்போது இன்றைக்குள் அலீமா கானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

Tags:    

Similar News